நேர்மை, நியாயம், நீதி வென்றது... நாளை முதல் களத்தில் பார்ப்போம் - விஷால் உற்சாகம்!
நேர்மை, நியாயம், நீதி வென்றுள்ளது, நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேர்மை, நியாயம், நீதி வென்றுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதற்கு நடிகர் விஷால் உற்சாகமடைந்துள்ளார்.
நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மனுவை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதன் பின்னணியில் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். இதனையடுத்து இரண்டாவது பரிசீலனைக்குப் பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், முதலில் நான் சொல்ல விரும்புவது நேர்மை, நியாயம் நீதி ஜெயித்துள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதலில் அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மனு ஏற்பு
தேர்தல் அதிகாரிகளின் பரிசீலனைக்காக காத்திருந்தோம், தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளார். ரொம்ப நன்றி தேர்தலில் சந்திப்போம், மக்களக்கு நல்லதையே நினைப்போம். இரண்டு கையெழுத்து போலி என்று சொல்லி புகார் இருந்தது விசாரணை நடத்திய பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரிந்த பின்னர் என்னுடைய மனு ஏற்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் இருப்பது உண்மை தான் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

ஆராய விரும்பவில்லை
யார் எதிர்க்கிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள், தூண்டிவிட்டு மனுவை நிராகரிக்க நினைக்கிறார்கள் என்றெல்லாம் நான் ஆராய விருப்பப்படவில்லை. நான் ஆர்கே நகர் தேர்தலில் மக்களை சந்தித்து மக்களுக்காக நல்லது செய்ய உள்ளேன்.

அனைத்திலும் தடைகளே
நேர்மையாக தேர்தலை சந்திக்க உள்ளேன். எல்லாமே நேர்மையாக நியாகமாக தேர்தல் ஆணையம் தீர்ப்பை அளித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் முதல் அனைத்தும் தடைகளே. நல்லது நடக்கும் போது தடைகள் வரும் அதையெல்லாம் கடந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

அனைவருக்கும் நன்றி
எனக்காக சக சுயேச்சை வேட்பாளர்கள் பெயர், ஊர் தெரியாதவர்கள் துணையாக நின்று தயவு செய்து நியாயத்தை நிலை நாட்டுங்கள் என்று கேட்டனர். விஷால் என்பவர் யார் என்றே தெரியாது என்று எனக்காக நியாயத்திற்காக குரல் கொடுத்தனர். எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் சந்திப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications