முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நடிகர் விவேக் சந்திப்பு
சென்னையில் மரங்கள் நடுவது தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் விவேக் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை, நடிகர் விவேக் சந்தித்து பேசியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று மதியம், முதல்வர் பன்னீர்செல்வத்தை நடிகர் விவேக் சந்தித்தார். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த விவேக் நிருபர்களிடம் கூறியதாவது: வர்தா புயலால் சென்னையில் பல ஆயிரம் மரங்கள் முறிந்தும், சரிந்தும் போயுள்ளன. மரங்களை மக்கள்தான் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டு மரங்கள் நமது மண்ணுக்கு பொருந்தாதவை.

எனவே, நமது மண்ணுக்கு ஏற்ப, மா, பலா, அரச மரங்களை அதிகம் நட வேண்டும். இந்த புயலுக்கு வெளிநாட்டு வகையான, வாகை மரமும், ஆலமரமும் தாக்குப் பிடிக்கவில்லை என்பது கண்கூடு. அரச மரம் தாக்குப்பிடித்தது. எனவே ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து மரங்களை பெயர்த்து எடுத்து வந்து, சென்னையில் நடவு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு விவேக் தெரிவித்தார்.
மரங்களை நடுவது குறித்து அரசுடன் பேச உள்ளேன் என விவேக் ஏற்கனவே டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications