கலாஷேத்ரா! நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ? குட்டி பத்மினிக்கு அபிராமி பதிலடி!
சென்னை: கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அபிராமியை நடிகை குட்டி பத்மினி விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு அபிராமியும் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த மாதம் இறுதி முதல் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் ஹரிபத்மனை போலீஸார் கைது செய்தனர்.

தோழி வீட்டில் பதுங்கல்: மாதவரத்தில் தோழி வீட்டில் தலைமறைவாக இருந்த ஹரி பத்மனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகிய ஆசிரியர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கூறினர். இதையடுத்து அந்த 4 பேர் மீதும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
4 பேராசிரியர்கள்: இதையடுத்து ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் ஹரி பத்மன் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் எல்லா மாணவிகளிடமும் நல்ல மாதிரியாகவே நடந்து கொண்டேன். யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.
ஹரி பத்மன் மனைவி புகார்: அது போல் ஹரிபத்மனின் மனைவி திவ்யாவும் தனது கணவர் அப்பாவி என்றும் தனது கணவரை சிக்க வைத்ததில் அரசியல் இருப்பதாகவும் இந்த சம்பவத்திற்கு பின் சில பேராசிரியைகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தூண்டிவிட்டதன் பேரில்தான் மாணவிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் தனது கணவர் பாலியல் புகார் கூறிய மாணவிக்கு பாடம் எடுத்ததில்லை என்றும் செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்ததுடன் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கூறியிருந்தார்.
பிக்பாஸ் அபிராமி: இந்த நிலையில் ஹரி பத்மனுக்கு ஆதரவாக பிக்பாஸ் புகழ் அபிராமி செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்திருந்தார். அபிராமி கூறுகையில் நான் இந்த கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை படித்தேன். அப்போது இது போல் பாலியல் குற்றங்கள் நடந்ததில்லை.
ஹரிபத்மன் நல்லவர்: இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ஹரிபத்மன் மிகவும் நல்லவர். அவரது பணியை மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் பாராட்டினார். அது மற்ற இரு பெண் ஆசிரியைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார்கள். மேலும் கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் எல்லாம் அந்த கல்லூரி குறித்து பேசுகிறார்கள் என அபிராமி தெரிவித்திருந்தார்.

பாலியல் கொடுமை: இவருக்கு பல்வேறு கண்டனங்கள் வலுத்தன. 1000 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்பதால் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை நடந்தது என்பது பொய்யாகிவிடாது என பலர் கருத்து தெரிவித்தனர். இந்த பேட்டியை பார்த்த குட்டி பத்மினி அண்மையில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் உங்களை தொடுவது என்பது எந்த ஃபீலும் உங்களுக்கு இருக்காது. ஆனால் மற்ற பெண்களும் அப்படியா? என அபிராமியிடம் குட்டி பத்மினி கேள்வி எழுப்பியிருந்தார்.
அபிராமி பதிலடி: இதற்கு அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி கிடையாது குட்டி பத்மினி ஆண்டி. உங்களுக்கு எந்த பீலிங்கும் வரவில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. ஒன் மோர் விஷயம் உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க என பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications