சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய நடிகை கைது: சினிமா பிரமுகரும் சிக்கினார்
சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய துணை நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்ததாக சினிமா பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் ராஜேஸ்வரி (33) இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.
சீரியல்களிலும், சினிமாவில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார் ராஜேஸ்வரி. இவருக்கு 2 பெண்குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவருடன், ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
ராஜேஸ்வரியின் மூத்தமகள் 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். தன்னை விட தன்னுடைய மகள் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார் ராஜேஸ்வரி. செந்தமிழரசுவும் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறினார். தான் சினிமா படங்கள் இயக்கியிருப்பதாகவும் கூறினார்.
ராஜேஸ்வரியின் 3 வயது குழந்தையை விளம்பர படங்களில் நடிக்க வைத்த காரணத்தால் செந்தமிழரசுவை ராஜேஸ்வரி நம்பினார். பின்னர் சிறுமியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி பலாத்காரம் செய்துள்ளார் செந்தமிழரசு.
கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்

சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார்
இந்த கொடுர சம்பவம் குறித்து குழந்தைகள் நல கமிட்டி சார்பில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கஸ்டமர் போல வந்து
செந்தமிழ்அரசை கையும், களவுமாக பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலை விரித்தனர் .மாறு வேடத்தில் சென்று, ஒரு புரேக்கரின் உதவியுடன், செந்தமிழ்அரசுவை சந்தித்தனர். சிறுமியிடம் உல்லாசமாக இருக்க, அவர் ரூ.1 லட்சம் பணம் கேட்டார். முன்பணமாக ரூ.10 ஆயிரம் கேட்டார். மீதி தொகையை கொடுத்தால் சிறுமியை அனுபவிக்கலாம் என்று செந்தமிழ்அரசு பேரம் பேசினார்.

கையும் களவுமாக கைது
ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், செந்தமிழ்அரசுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். ராஜேஸ்வரியையும், உடந்தையாக இருந்த புரோக்கரையும் கைது செய்தனர். கைதான மூவரும் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காமெடி நடிகரிடம் விசாரணை
கைதான செந்தமிழ் அரசு கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சென்னை போரூரில் வசித்தார். அவர் இயக்கிய செய்த படங்கள் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அரசு காப்பகத்தில்
மீட்கப்பட்ட சிறுமியை மயிலாப்பூர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்த போலீசார், பின்னர். அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

துணை நடிகையான சிறுமி
சினிமாவில் துணைநடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட சிறுமி சிறு சிறு வேடங்களில் தலை காட்சியுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள ஒரு சினிமா விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications