மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோவா.. நடிகையின் "ஷாக்" பேச்சு!
மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை என நடிகை கஸ்தூரி டிவிட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை என நடிகை கஸ்தூரி டிவிட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கிறேன் ஆனால் என்னுடைய உணவு பழக்கம் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக கடந்த 26ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் நேற்று பிற்பகல் வளாகத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த மணீஷ் என்ற மாணவனே தாக்கியதாகவும், மணீஷ் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

கஸ்தூரியின் சர்ச்சை கருத்து
இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
|
மாட்டுக்கறி விருந்து தவறு
அதாவது, மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தவறானது, அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
|
நீங்கள் ஹீரோ இல்லை
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன், ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை.
|
முத்த போராட்டத்திற்கும்..
முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வசைபாடும் இளைஞர்கள்
கஸ்தூரியின் இந்த டிவீட்டுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மாட்டிறைச்சிக்கு தடை, மாட்டிறைச்சி உண்பவர் மீது தாக்குதல் உள்ளிட்டவற்றால் கொதித்து போயுள்ள இளைஞர்கள் கஸ்தூரியை வசைபாடி வருகின்றனர்.

ரஜினி குறித்து பேசி..
ரஜினியின் ரசிகர்களுடனான பேச்சு குறித்து போர் அடிக்குது என போட்டு அண்மையில் அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார் கஸ்தூரி. இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்திலும் தலையிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications