மாதம் ரூ. 2.50 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்.. நடிகை ரம்பா குடும்ப கோர்ட்டில் மனு
கணவரிடம் இருந்து மாதம் ஒன்றுக்கு 2.50 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வேண்டும் என்று நடிகை ரம்பா குடும்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தனக்கும் தனது குழந்தைகளுக்கும் மாதம் தோறும் ரூ. 2.50 லட்சம் ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டு குடும்ப கோர்ட்டில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களோடு நடித்து பிசியாக இருந்தவர் ரம்பா. இவர் கனடாவில் உள்ள இந்திரகுமார் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கால் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனக்கும் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மாதம் தோறும் 2.50 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக தனது கணவர் தர உத்தரவிடக் கோரி மற்றொரு மனு ஒன்றை ரம்பா தாக்கல் செய்துள்ளார்.
தான் தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும், எனவே தனக்கும் தனது 2 பெண் குழந்தைகளுக்குமான படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சம் ரூபாய் தனது கவர் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு டிசம்பர் 3ம் தேதி சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications