மீண்டும் ஆதிராஜாராம்.. அதிமுக அமைப்புச் செயலராக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக நியமனம்!
சென்னை: அதிமுகவில் ஒருகாலத்தில் கோலோச்சி பின்னர் காணாமல் போன ஆதி ராஜாராம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதிமுகவின் அமைப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக டி.ஜி.வெங்கடேஷ் பாபு இருந்தார். அவர் வட சென்னை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் பொறுப்பு தற்போது ஆதி ராஜாராமிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஓராண்டு காலத்துக்கு இந்த அமைப்பின் தலைவராகச் செயல்படுவார்.
அதேபோல் அதிமுகவிலும் ஆதி ராஜாராமுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அமைப்புச் செயலாளர்களாக விசாலாட்சி நெடுஞ்செழியன், பொன்னையன், பி.எச்.பாண்டியன், சுலோச்சனா சம்பத், செம்மலை, கோகுல இந்திரா, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
2000ஆம் ஆண்டுகளில் சென்னை அதிமுகவில் கோலோச்சியவர் ஆதி ராஜாராம். வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். தென் சென்னை மாவட்ட அதிமுக செயலராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications