அழகிரியின் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி - ஹைகோர்ட்
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி கல்லூரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. நடப்பு ஆண்டுக்கான பொறியில் கலந்தாய்வு பட்டியலில் தயா பொறியியல் கல்லூரியின் பெயரை சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முறையாக அனுமதி பெறப்பட்ட கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடத்த இதுவரை அனுமதி வழங்காததை நீதிமன்றம் கண்டித்தது.
இந்த கல்லூரியை கட்டும்போது அழகிரி அருகில் உள்ள கோவில் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications