துணை ஜனாதிபதி தேர்தல்.. வெங்கையா நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டமி வேட்பாளர் வெங்கையா நாயுடுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இருவரம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதையடுத்து, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி கூறியிருந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications