For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் தெற்கு, மேற்கு மண்டலங்களில் அதிமுக ஆதிக்கம்- குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஐவரணியில் இருந்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், பழனியப்பன் வெற்றி பெறுவார்கள் என்றும் ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனுக்கும் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு, திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாசுக்கும் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அந்த அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமாருக்கு தோல்வியே கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு முடிவை குமுதம் ரிப்போர்ட்டர் இன்று வெளியிட்டுள்ளது. இதில் 75 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் 23 தொகுதிகளில் திமுக வெல்லும் என்றும் 21 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் அள்ளும் அதிமுக

சேலத்தில் அள்ளும் அதிமுக

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர்(தனி) ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

வீரபாண்டி, ஏற்காடு (தனி)

வீரபாண்டி, ஏற்காடு (தனி)

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வீரபாண்டி ஆ.ராஜா வெற்றி பெறுவார் என்றும், அதேபோல ஏற்காடு ( எஸ்.டி) தொகுதியில் திமுகவின் தமிழ் செல்வன் வெற்றி பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. சேலம் மேற்கு செங்கவல்லி தனி, ஓமலூர் தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.

பென்னாகரம் அன்புமணி

பென்னாகரம் அன்புமணி

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), ஆகிய தொகுதிகளில் அதிமுகவே வெல்லும் என்று கூறுகிறது குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு. பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கும் அதிமுக வேட்பாளர் கே.பி முனுசாமிக்கும் இடையே இழுபறி நிலையே நீடிக்கிறது அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிமுக ஆதிக்கம்

கிருஷ்ணகிரியில் அதிமுக ஆதிக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கிருஷ்ணகிரி தொகுதியை திமுக கைப்பற்றும் என்றும் மீதமுள்ள பர்கூர், ஊத்தக்கங்கரை, வேப்பனஹள்ளி தொகுதிகளில் அதிமுகவே வெல்லும் என்றும் ஓசூர், தளி தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

கோவை மாவட்டம்

கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வால்பாறை தனி தொகுதியில் மட்டுமே இழுபறி நிலை நீடிக்கிறது, மீதமுள்ள மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் குமாரபாளையத்தில் போட்டியிடும் அமைச்சர் பி. தங்கமணி மீண்டும் தொகுதியை தக்க வைப்பார் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

செந்தில் பாலாஜி இழுபறி

செந்தில் பாலாஜி இழுபறி

கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை தொகுதியில் அதிமுக வெல்லும் என்றும் அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கும், திமுக வேட்பாளர் கரூர் பழனிச்சாமிக்கும் கடுமையான போட்டி நிலவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஈரோடு, திருப்பூர்

ஈரோடு, திருப்பூர்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளையும் அதிமுகவே அள்ளுகிறது என்றும் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் திருப்பூர் தெற்கு மடத்துக்குளம் தொகுதிகளில் திமுக வெல்லும் என்றும் மீதமுள்ள 6 தொகுதிகளில் அதிமுகவே வெல்லும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கூறியுள்ளது.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தனி, குன்னூர் தொகுதிகளில் திமுகவின் கை ஓங்கியுள்ளது. மீதமுள்ள உதகமண்டலம் தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர் அப்பச்சி வினோத் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளது.

மதுரையில் ஜாக்பாட்

மதுரையில் ஜாக்பாட்

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் மதுரை மத்திய தொகுதியைத் தவிர மீதமுள்ள 9 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என்றும் குமுதம் ரிப்போட்டர் கூறியுள்ளது. திமுக வேட்பாளர் பிடிஆர் தியாகராஜன் அதிமுக வேட்பாளர் ஜெயபால் இடையே மதுரை மத்தி தொகுதியில் கடும் போட்டி நிலவுவதால் அது இழுபறி நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிவகங்கையில் திமுக வெல்லும்

சிவகங்கையில் திமுக வெல்லும்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் வெல்லும் என்றும் திருப்பத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தனி தொகுதியில் இழுபறி நிலையே நீடிக்கிறது.

கருணாஸ் இழுபறி

கருணாஸ் இழுபறி

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் நடிகர் கருணாஸ் திமுக வேட்பாளர் திவாகரன் இடையே இழுபறி நிலை உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பரமக்குடி தொகுதியிலும் திமுகவே வெல்லும் என்றும் ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

நெல்லையில் திமுக வெல்லும் தொகுதிகள்

நெல்லையில் திமுக வெல்லும் தொகுதிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான பாளையங்கோட்டை மைதீன்கான், நாங்குநேரி ஹெச். வசந்தகுமார், ராதாபுரம் அப்பாவு, ஆலங்குளம் பூங்கோதை, கடையநல்லூர் முகமது அபுபக்கர் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்றும், அம்பாசமுத்திரம் , தென்காசி, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர், ஆகிய தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்குமார் தோல்வி

சரத்குமார் தோல்வி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுகவும் 3 தொகுதிகளில் அதிமுகவும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமக தலைவர் சரத்குமார், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் இழுபறி நிலை உள்ளது.

குமரியை கைப்பற்றும் திமுக

குமரியை கைப்பற்றும் திமுக

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் கன்னியாகுமரியில் மட்டுமே அதிமுகவின் தளவாய் சுந்தரத்திற்கும் திமுகவின் ஆஸ்டினுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. நாகர்கோவில், குளச்சல், பத்னாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு, ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன் சத்திரம், நத்தம் தொகுதிகளை திமுக கைப்பற்றுகிறது. நிலக்கோட்டை (தனி) திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பழனியிலும், ஆத்தூரிலும் இழுபறியே நீடிக்கிறது. அமைச்சர் விஸ்வநாதன் திமுகவின் பெரியசாமி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேனி - விருதுநகர்

தேனி - விருதுநகர்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்றும் போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளது. இதேபோல விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், திருச்சுழியில் திமுக வெல்லும் என்றும் மீதமுள்ள ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக 75 திமுக 23 இழுபறி 21

அதிமுக 75 திமுக 23 இழுபறி 21

குமுதம் ரிப்போர்ட்டர் இன்று வெளியிட்ட 119 தொகுதிகளின் கருத்துக்கணிப்பில் மொத்தம் 75 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் திமுக 23 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் 21 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
ADMK will win assembly election in South and West districts says Kumudham reportors Opinion poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X