சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் !
சென்னை: தமிழக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஜனவரி 30-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 23-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

234 தொகுதிகளுக்கும் 26 ஆயிரத்து 174 பேர் விருப்பமனு அளித்தனர். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 7,936 பேர் மனு செய்திருந்தனர். 19,498 பேர் தாங்கள் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்பமனு கொடுத்திருந்தனர்.
இந்த விருப்ப மனு தாக்கல் மூலம் அ.தி.மு.க.வுக்கு ரூ.28 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின்னர் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தகுதியுள்ள 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சமீபத்தில் வெற்றிவேல், நூர்ஜகான், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட 5 பேரை ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தினார். அதன் பிறகு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளுடன் சந்திப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா இன்று மீண்டும் நேர்காணலை தொடங்கினார்.
அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களில் சுமார் 60 பேர் வரவழைக்கப்பட்டனர். நேர்காணலின் போது கட்சியின் வெற்றி வாய்ப்புகள், வேட்பாளர்களின் தொகுதியில் அதிமுகவின் பலம் எவ்வாறு உள்ளது. 1989ல் வேட்பாளர்கள் அதிமுகவின் எந்த அணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க் கிழமை) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா நேர்காணலை தொடங்கி இருப்பதால் அ.தி.மு.க.வினரிடையே உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications