அலகு குத்தி "அப்பல்லோ முருகன்" கோவிலில் அதிமுகவினர் உருக்கம்..! #jayalalithaa
சென்னை: வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தனது நாக்கில் அலகு குத்தி வந்து அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள முருகன் கோவிலில் பய பக்தியுடன் சாமி கும்பிட்ட செயல் அங்கிருந்தவர்களை அதிர வைத்தது.

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி விதம் விதமான பிரார்த்தனைகளில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள், மண் சோறு சாப்பிடுகிறார்கள். அலகு குத்துகிறார்கள். அன்னதானம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் விமல் என்பவர், தனது நாக்கில் அலகு குத்தி அப்பல்லோ மருத்துவமனை அருகில் உள்ள முருகன் கோவிலில் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். இதைப் பார்த்து அங்கிருந்தோர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி, நியமன எம்எல்ஏவான டாக்டர் நான்சி ஆன் சிந்தியா ஆகியோரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து முதல்வர் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications