விஸ்வரூபமெடுக்கும் சசிகலா எதிர்ப்பு: தமிழகத்தில் பல இடங்களில் ஜெ. தீபா பேரவை தொடக்கம்
அதிமுக தொண்டர்களிடையே சசிகலாவுக்கு எதிர்ப்பு தொடருகிறது. பல இடங்களில் அதிமுகவினர் ஜெ.தீபா பேரவையை தொடங்கியுள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. சசிகலா எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் பல இடங்களில் ஜெ. தீபா பேரவையை தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் வர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெ. தீபா வீட்டு முன்பாக நாள்தோறும் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அவர்களை சந்திக்கும் தீபா, முடிவு அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதனிடையே ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பேனர்கள் கிழித்தெறியப்படுவது தொடருகிறது.
ஜெ. தீபாதான் அதிமுகவின் பொதுச்செயலராக வேண்டும்; ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தீபாதான் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள். சசிகலாவுக்கு நாளுக்கு நாள் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பு வலுத்து விஸ்வரூபமெடுத்து வருகிறது.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications