விடாமல் எரிக்கும் அதிமுகவினர்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கொடும்பாவிகளை!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை அதிமுகவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது கொடும்பாவிகளை அதிமுகவினர் எரித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து இளங்கோவன் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இளங்கோவனைக் கண்டித்து அதிமுகவினர் உக்கரமான போராட்டத்தில் குதித்துள்ளனர். இது பெரும்பாலான இடங்களில் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இளங்கோவன் கொடும்பாவிகளை எரித்தும் அவரது படத்தை செருப்பால், துடைப்பத்தால் அடித்தும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் அதிமுகவினர்.

திருச்சியில், இன்று காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்க முயன்ற அதிமுகவினரை போலீஸார் தடியடி நடத்தில் கலைத்து வி்ரட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் போலீஸாருடன் சண்டையில் குதித்தனர். அதிமுக எம்.பி குமார் தலைமையில் இந்த போராட்டத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இளங்கோவன் உருவ பொம்மையை விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் ஊர்வலமாக எடுத்து சென்று எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications