புதிய அரசியல் கட்சியை தொடங்க கோரி தீபா வீடு முன்பு இன்றும் திரண்ட அதிமுக தொண்டர்கள்!
புதிய அரசியல் கட்சியை தொடங்க வலியுறுத்தி தீபா வீடு முன்பு இன்றும் அதிமுக தொண்டர்கள் திரண்டனர். எம்ஜிஆர் பிறந்த நாளில் தீபா முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
சென்னை: புதிய அரசியல் கட்சியை ஜெ. தீபா தொடங்க வலியுறுத்தி அவரது வீடு முன்பாக இன்றும் அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. இதற்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தாலும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் இணைந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா பெயரில் பேரவைகளை தொடங்கியுள்ளனர். அத்துடன் அவரது வீடு முன்பாக ஒன்று திரண்டு தீபா அரசியலுக்கு வர வேண்டும்; புதிய கட்சியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று மாட்டு பொங்கல் நாளிலும் நூற்றுக்கணக்கானோர் தீபா வீடு முன்பு திரண்டனர். அவர்கள் புதிய அரசியல் கட்சியை தீபா தொடங்கவும் வலியுறுத்தினர்.
இதனிடையே எம்ஜிஆர் பிறந்த நாளான நாளை மறுநாள் ஜெ. தீபா முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications