ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு... வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க மக்களுக்கு அனுமதி!
அதிமுக தொண்டர்கள் தங்களின் அன்புத் தலைவி ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்து வீட்டை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் நினைவுகள் அதிமுக தொண்டர்கள் மனதில் இருந்து அத்தனை எளிதாக நீங்கிவிடாது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் லட்சோப லட்சம் தொண்டர்களால் மேலும் பரவும். சென்னைக்கு வரும் அதிமுக தொண்டர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தையும், தி. நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தையும் பார்க்காமல் செல்வதில்லை.
அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடமும், ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்து இல்லமும் இணைந்துள்ளது. நேற்று வரை பரபரப்பாக காணப்பட்ட வேதா நிலையமும், போயஸ் தோட்டத்து சாலையும் தனது களையை இழந்து காணப்படுகிறது என்பதுதான் உண்மை.

வேதா நிலையம்
1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மாவால் 1.32 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு தான் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம். 24,000 சதுர அடி பரப்பு உள்ள இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 43.96 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த வீட்டிற்குள் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள், உதவியாளர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

வரலாற்று வெற்றி
2016 சட்டசபை தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று 4 மாதம் மட்டுமே ஆட்சிக் கட்டிலில் இருந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இந்த செய்தி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டுப்பக்கம் போய் ஒருமுறையாவது அந்த வீட்டு கேட்டுக்களை மட்டுமாவது பார்த்து விட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் இப்போதைய விருப்பமாகும். ஆனால் அதற்கு கூட காலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

வேடிக்கை பார்க்க அனுமதி
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வரும் அதிமுக தொண்டர்கள், நேராக செல்லும் இடம் போயஸ் தோட்டம்தான். இப்போது வரும் தொண்டர்களை தடுக்காமல் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து விட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஒரே ஆறுதல்.

நினைவிடமாகுமா?
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உபயோகித்த பொருட்கள் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதா உபயோகித்த பொருட்களை வைத்து நினைவிடம் அமைக்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாகும். அரசு நடவடிக்கை எடுக்குமா?
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications