தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்!
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை பூவிருந்தவல்லி அலுவலகத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ அலுவலத்தை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து நிமிடத்துக்கு நிமிடம் விதவிதமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக 19 எம்.எல்.ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.

அதனையடுத்து அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்களில் தினகரனுக்கு எதிராக உள்ளவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதனால், அதிருப்தியடைந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ ஏழுமலையின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் சொகுசு விடுதியைப் புதுச்சேரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications