முதல்வரானார் ஜெயலலிதா.. "சியர்ஸ்" சொல்லி டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்த அதிமுகவினர்..!
கரூர்: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுள்ளதை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏதோ திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்த சந்தோஷத்தை டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி தடபுடலாக கொண்டாடி வருகிறார்கள் அதிமுகவினர். தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளில் மது விற்பனை ஜரூராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையொட்டி சென்னை நகரமே நேற்று அல்லோகல்லப்பட்டு விட்டது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க தொண்டர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதால் சென்னை நகரில் வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
நேற்றெல்லாம் சாலையில் போன வாகனங்கள் இருப்பிடம் திரும்புவதற்குள் படாதபாடு பட்டு விட்டது.

இதற்கிடையே ஜெயலலிதா முதல்வரானதை அதிமுகவினர் பல விதங்களில் கொண்டாடி வருகின்றனர். மது பானக் கடைகளிலும் அதிமுகவினர் கூட்டம் படையெடுத்தபடி உள்ளது. பல அதிமுகவினர் ஜெயலலிதாவுக்காக நேர்த்திக்கடன் செலுத்தி மொட்டை போட்டு தலை மீது பூசிய சந்தனம் காய்வதற்குள்ளாகவே கடையைத் தேடி ஓடி வந்த காட்சியையும் தமிழகம் கண்டது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications