பாட்டிலுக்காக முட்டி மோதிய அதிமுகவினர்.. கலகலத்த கடை.. அதிர்ந்த டாஸ்மாக்!
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்த அதிமுகவினர் டாஸ்மாக் கடையில் சரக்கு கேட்டு முட்டி மோதியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று மாலை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினரும் எம்ஜிஆர் ரசிகர்களும் குழுமியுள்ளனர்.
இவர்கள் வந்த வாகனங்களால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பெரும் இடையூறு ஏற்பட்டது.

முண்டியடித்து
இந்நிலையில் நீண்ட தூரத்தில் உள்ள கட்சியினர் நேற்று இரவே சென்னை வந்துவிட்டனர். இதனால் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என காத்திருந்தனர். மதியம் 12 மணிக்கு திறந்தவுடன் முண்டியடித்து கொண்டு ஓடினர்.

சண்டை
நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள் முன்னால் இருந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல பாட்டில்களை வாங்கியதால் சரக்கு தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொண்டு முண்டியடித்தனர்.
|
அதிர்ச்சி
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டமாக நின்று கவுன்ட்டரில் பாட்டில்களை கேட்பதால் டாஸ்மாக் ஊழியர்களும் சற்று குழப்பம் அடைந்தனர். கொடுக்க கொடுக்க மேலும் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எம்ஜிஆர் பாடலுக்கு ஆட்டம்
சரக்குக்கான சைட்டிஷ் தேடி அருகில் உள்ள பாஸ்ட் புட் கடைகளிலும் கூடினர். மேலும் இவர்களுக்கு பிரியாணி உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சரக்கு, பிரியாணி, எம்ஜிஆரின் பாடல்களுக்கு ஆட்டம் என அதிமுக தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
