2 முறை என்னை தோற்கடிச்சீங்க.. இந்த முறை என் மனைவியை ஜெயிக்க வைங்க! "இறந்த ஆன்மா" தேர்தல் பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி: இரண்டு முறை தோற்றுப்போன என்னை வேட்பாளராக நினைத்து ஆதரவற்ற என் மனைவிக்கு வாக்களிப்பீர்களா? என இறந்துபோன கணவரின் ஆன்மா பேசுவதுபோல 52 வயது அதிமுக பெண் வேட்பாளர் வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டி அதிகம் என்பதால் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுட்டு வருகிறார்கள்.

இரண்டு முறை தோல்வி
அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சியிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் என்பவர் இரண்டு முறை தோற்றுப் போனதாக கூறப்படுகிறது.

52 வயது
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இம்முறை 52 வயதான அவருடைய மனைவி சுமதி என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது துண்டுப் பிரசுரங்களில் இரண்டு முறை தோற்றுபோன என் ஆன்மாவிற்காக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் என் மனைவி போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது.

ஆன்மா
"உங்கள் ஆதரவே என்னை இழந்து தவிக்கும் என் குடும்பத்தின் வாழ்வு" என துண்டு பிரசுரங்கள் மூலம் கணவரின் ஆன்மா பேசுவதைப் போல சுமதி வாக்காளர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தார். குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என 20 ரூபாய் உறுதிப் பத்திரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு வகையில் வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை சேகரித்து வருவோருக்கு மத்தியில், இரண்டு முறை தோற்றுப் போன ஆதரவற்ற என் மனைவிக்கு வாக்களிப்பீர்களா என இறந்து போன கணவர் பேசுவதுபோல துண்டு பிரசுரங்கள் மூலம் வாக்கு சேகரித்தது நெகிழ்ச்சியும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஜ்ஜி சுட்டு, டீ ஆத்தி, தோசை சுட்டு, பரோட்டா கொத்தி வாக்கு கேட்போருக்கு மத்தியில் இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரை கலங்க செய்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications