அதிமுக வேட்பாளர்களில் 7 பேர் மாற்றப்படுகிறார்களா?
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 7 பேர் அதிரடியாக மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முதன் முதலில் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தான். முதல்வர் ஜெயலலிதா பிரமதர் ஆக வேண்டும் என்பதால், தமிழகம் மற்றும் புதுவை ஆகிய 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சிலர் எதிர்க் கட்சிகளை தேர்தலில் சந்திக்கும் அளவு வலிமை பெற்றவர்களாக இல்லை என்ற கருத்து நிலவி வருகின்றது. இது குறித்து அதிமுக தொண்டர்கள் தங்களது கருத்தை கட்சி தலைமைக்கு பேக்ஸ் மற்றும் கடிதம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.
மத்திய சென்னையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடும் விஜயகுமார், நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை எதிர்த்து போட்டியிடும் சி. கோபாலகிருஷ்ணன், மதுரையில் வேலுச்சாமியை எதிர்த்து போட்டியிடும் இரா. கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம், மற்றும் தூத்துக்குடி வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தஞ்சையில் டி. ஆர்.பாலுவை எதிர்த்து களம் இறங்கிய பரசுராமன் ஆகிய சிலருக்கு எதிராலிகளை சமாளிக்கும் அளவு திறமை குறைவாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அதிமுக மேலிடம் தங்களது வழக்கமான பாணியில் உளவுத்துறை மூலம் வேட்பாளர்கள் வெற்றி தோல்வியை ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு முன்பு, பிரச்சாரத்திற்கு பின்பு என கணித்து வருகின்றார்களாம். ஜெயலலிதா பிரச்சாரம் செய்த பின்பும் தொகுதியில் தேறாத வேட்பாளர்கள் மாறறப்படுவர் என்ற தகவல் உலா வருவகின்றது.
குறிப்பாக அதிமுகவில் கரூர் வேட்பாளர் தம்பிதுரை, திருச்சி வேட்பாளர் குமார் போன்ற சிலரை தவிர மற்றவர்கள் பிரச்சாரம் மந்தமாகவே உள்ளதாக கூறப்படுகின்றது. பல லட்சம் செலவு செய்த பின்பு வேட்பாளர்களை மாற்றினால் என்ன செய்வது என்ற கவலை தான் இந்த மெத்தனத்திற்கு காரணமாக கூறப்படுகின்றது.
எனவே, அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக பிரச்சாரம் செய்ய கட்சி மேலிடம் புதிய தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகின்றது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications