டேபிள், சேரைத் தூக்கி வீசி அடித்து கட்டி உருண்ட அதிமுக கவுன்சிலர்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்டத்தில் கோஷ்டி மோதல் வெடித்தது. அதிமுக கவுன்சிலர்கள் இரு பிரிவாக பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த ரகளையில் 3 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தங்கமுத்து. இவரது தலைமையில் கூட்டம் நடந்தது. அப்போது துணைத் தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் ஒரு பிரிவு அதிமுக கவுன்சிலர்கள் திட்டப் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்து பிரச்சினையைக் கிளப்பினர்.

இதற்குத் தலைவர் தங்கமுத்து ஆதரவு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் வெளியிலிருந்து சிலர் உள்ளே புகுந்தனர். இரு தரப்பும் சரியான சண்டையில் இறங்கினர். டேபிள், சேர்களைத் தூக்கி பலமாக தாக்கிக் கொண்டனர்.
போர்க்களமாக மாறிப் போனது கூட்ட அரங்கம். இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவனைக்குக் கொண்டு போனார்கள். இந்த மோதலால் நகராட்சிக் கூட்டம் ரத்தாகிப் போனது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications