'அம்மா'வை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி எதிரிகள் மனு தாக்கல் செய்து சதி: அமைச்சர் பழனியப்பன்

Subscribe to Oneindia Tamil

ADMK doesn't approach court to transfer Jaya to TN prison
சென்னை: ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி யாரோ விஷமத்தனமாக மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழ் நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மனுக்களை யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும், இதற்கும் ஜெயலலிதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிபதிகளிடையே ஜெயலலிதா மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஜெயலலிதா தொடர்பாக மனுக்களை, அவர்களுடைய வழக்குரைஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும், அவரது அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+