அடுத்தது ராஜினாமா நாடகம்... முந்துவது தம்பிதுரையா? உதயகுமாரா?
சசிகலா முதல்வர் பதவி ஏற்க வலியுறுத்தி அதிமுகவில் 'ராஜினாமா' நாடகங்கள் நடக்கலாம். அனேகமாக தம்பிதுரை அல்லது உதயகுமார் இந்த ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைக்கக் கூடும்.
சென்னை: சசிகலாதான் முதல்வராகப் போகிறார் என அதிமுக நிர்வாகிகள் திடமாக நம்புகின்றனர். இந்த நிலையில் சசிகலா முதல்வராக வலியுறுத்தி அமைச்சர் பதவி, எம்பி பதவியை ராஜினாமா செய்யும் நாடகம் எப்போதுவேண்டுமானாலும் அரங்கேறும் நிலை உள்ளது.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்ற வியூகம் வகுத்தார். இதற்காக போயஸ் கார்டனில் மாவட்ட நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு நாடகங்கள் நடந்தேறின. அதிமுக மூத்த தலைவர்கள் ஊடகங்களில் சின்னம்மாதான் அடுத்த பொதுச்செயலர் என கூப்பாடு போட்டனர்.

இப்போது ஒருவழியாக அதிமுக பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. அடுத்ததாக முதல்வர் நாற்காலியை கைப்பற்றப் போகிறார்கள். இதற்காகவே அமைச்சர்கள், எம்பிக்கள் இனி சசிகலாவே முதல்வர் என்ற குரலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடுத்ததாக சசிகலா முதல்வர் பதவி ஏற்க வலியுறுத்தி இதோ ராஜினாமா செய்யப் போகிறோம் என அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் களமிறங்க போகிறார்கள். இந்த நாடகத்துக்கு பிள்ளையார் சுழிபோடுவது அனேகமாக தம்பிதுரையாகவோ அமைச்சர் உதயகுமாராகவோ இருக்கலாம் என தெரிகிறது.
இந்த இருவருக்குமே முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டாதவர்; பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பவர்கள் இருவரும்... ஆகையால் இந்த இருவரில்தான் ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைப்பார்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications