சேலத்தில் தாய், மகளை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது
சேலம்: சேலத்தில் தாய், மகளை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். அவரது 16 வயது மகள் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார். அவரை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயாலளர் விஸ்வநாதனின் மகன் சாமிநாதன்(17) ஒருதலையாக காதலித்துள்ளார்.
அவரது காதலை ஏற்க மறுத்த சாந்தியின் வீட்டுக்கு சென்றுள்ளார் சாமிநாதன். தனது காதலை ஏற்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அறிந்த விஸ்வநாதன், அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் முருகனின் வீ்ட்டுக்கு சென்று சாமிநாதனை வளைத்துப் போட முயற்சிக்கிறீர்களா என்று கூறி சாந்தியையும், அவரது தாயையும் நிர்வாணப்படுத்தி தாக்கினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து சாந்தியும் அவரது தாயும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். மேலும் விஸ்வநாதன், அவரது உறவினர் முனுசாமி(38), சேட்டு (35) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விஸ்வநாதனின் மனைவி செல்வி மற்றும் வெள்ளையன்(எ) அய்யம்பெருமாளை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications