எங்களிடம் பெரும்பான்மை இருக்கு.. கோவையில் பதிலடி கொடுத்த எடப்பாடி
அதிமுக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை: அதிமுக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் கலந்து கொண்டனர். இன்னும் சிலர் அவர்கள் வீட்டு அலுவல் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். எனினும் நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய சூழலுக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலை என்று முதல்வர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications