டெல்லியில் அதிமுக தன்னை தானே காவு கொடுத்துள்ளது... திருநாவுகரசர் சுளீர்: வீடியோ
ஜனாதிபதி தேர்தலில் அதிமுக, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தன்னைத்தானே காவு வாங்கிக்கொண்டுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கட்சி தன்னை காவு கொடுத்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாருமே, அதிமுக ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை விரும்பவில்லை.

ஆளும் அதிமுக அரசு, ஆட்சியை சில காலம் காப்பாற்றிக்கொள்ள இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிமுக கட்சி தன்னை காவு கொடுத்துள்ளது என கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், தினகரன் என அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அதிமுகவைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications