அரசை ஆதரித்து வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு அதிமுக கொறடா உத்தரவு- ஓபிஎஸ் அணிக்கு நெருக்கடி!
சென்னை: சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா அரியலூர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே அதிமுகவின் கொறடா அரியலூர் ராஜேந்திரன், அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்களும் நாளை சட்டசபைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுக்கு ஆதரவாக அனைத்து எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று கூவத்தூரில் கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தவும் உள்ளார். கொறடா உத்தரவை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்.
இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications