ஊரெல்லாம் அதிமுகவுக்கு வெற்றி.. ஆனால் இங்கு மட்டும் தோல்வி..!
தூத்துக்குடி: உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் நகராட்சியின் முதல் வார்டில் நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அந்தோணி கிரேசி, 1,16,693 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 84885 வாக்கு வித்தியாசத்தில் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றார். இதேபோல பிற பகுதிகளிலும் கூட பெரும்பாலும் அதிமுகதான் முன்னணியில் உள்ளது. இதனால் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது.
இந்த வார்டில் மொத்தம் 1490 ஓட்டுக்கள் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரத் என்பவர் 1024 ஓட்டுக்கள் பெற்றார். அ.தி.மு.க,. வேட்பாளர் அமலக்கனி வெறும் 466 ஓட்டுக்களேப் பெற்றார். 558 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றதால் அதிமுக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications