ஜெயிலில் ஜெ.... மனமுடைந்த காஞ்சிபுரம் அதிமுக தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து காஞ்சிபுரம் அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலையைச் சேர்ந்தவர் பாபு (45). இவர் குருவிமலை அதிமுக கிளையின் உதவிச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை அறிந்து பாபு அதிர்ச்சி அடைந்தார். சோகமான மனநிலையில் இருந்த பாபு, தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊர்மக்க அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாபுவின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, பாபு மனமுடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த பாபுவிற்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+