சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க அதிமுக கூட்டம்...28ம் தேதி எம்பி, எம்எல்ஏக்கள் கூடி முடிவு!
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்காக வரும் 28ம் தேதி அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்காக வரும் 28-ம் தேதி அதிமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதிமுகவின் முதல்வர் பழனிசாமி அணி, ஒ.பன்னீர்செல்வம் அணி இணைந்து ஆட்சியை பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறி வரும் துணை பொதுச் செயலாளர் தினகரன் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வhர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் 28ம் தேதி சென்னையில் நடைபெற இந்தக் கூட்டத்திற்கு அதிமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் செயல்பட முடியாத உள்ள நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பரிந்துந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என்பது அக்கட்சியின் சட்ட விதி.
அதன்படி ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கட்சியின் வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழுவின் ஒப்புதலும் பெறப்பட உள்ளது.
மேலும் அதிமுகவை பொருத்தவரை உறுப்பினர்களை நீக்குதல், மற்றும் சேர்த்தல் தொடர்பான அனைத்து அதிகாரங்களும், பொதுசெயலாளருக்கே இருப்பதால் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திலும் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிட்டுள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வரின் இந்த நடவடிக்கையால் தினகரனுக்கு சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications