சமூகவலைதளம், வாட்ஸ்ஆப்பில் அம்மா போஸ்டர் அனுப்பும் அதிமுக ஐ.டி. பிரிவு
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளில் சுணக்கம், வெள்ள நிவாரணப் பொருட்களை பறித்தல் ஆகிய செயல்களால் அரசு மீதும் அதிமுகவினர் மீதும் மக்களிடையே கடும் வெறுப்பு பரவி வரும் நிலையில், அதை சமாளிக்கவும் அரசின் நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லவும் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அம்மா புகழ் பாடும் போஸ்டர்களை அதிமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டு வருகிறது.
ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கையாகவே தெரிகிறது.

வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து ஒரு வகையாக மீண்டு வருகின்றன. மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோது முதல்வர் ஜெயலலிதா தனி ஆளாக சென்னையை காப்பாற்றுவதாகக் கூறி அதிமுகவினர் பெரிய விளம்பர போஸ்டர்கள் வைத்து மக்களிடம் திட்டு வாங்கினர்.
இந்நிலையில் சாலையோரம் போஸ்டர்கள் வைத்தால் மக்கள் திட்டுவதுடன் அவற்றை கிழித்தெறிந்துவிடுவார்கள் என்று நினைத்த அதிமுகவினர் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர்.

ஆம், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அம்மா புகழ்பாடும் டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் தீயாக வேலை செய்து போஸ்டர்களை வெளியிட மறுபக்கம் மக்கள் அதே சமூகவலைதளங்கள், வாட்ஸ் ஆப்பில் அதிமுகவினரை கழுவிக் கழுவிக் ஊத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலையில் தங்கள் தரப்பின் நியாயங்களை எடுத்துச் சொல்லும் வகையில் ஐ.டி. பிரிவை களமிறக்கியுள்ளது அதிமுக.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications