அமாவாசையும்,அதிமுகவும்...!
அமாவாசைக்கும் அதிமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அமாவாசை வந்தாலே அமைச்சர்கள் அலறுவார்கள்
Recommended Video

சென்னை: ஆவணி அமாவாசை நாளான இன்று அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்ந்துள்ளது. அமாவாசை நாளுக்கும், அதிமுக கட்சியில் நிகழும் அதிரடி மாற்றங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு.
கடந்த 2011 - 2016 அதிமுக ஆட்சி காலத்தில் அமாவாசை வரப்போகிறது என்றாலே அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்கும்.
அமைச்சரவையில் யார் தலை உருளுமோ என்ற எண்ணம்தான் அமைச்சர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. அவர்கள் நினைப்பது போலவே அமாவாசை, பவுர்ணமியை ஒட்டியே அமைச்சரவை மாற்றம், அமைச்சர்கள் நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

ஜெயலலிதா கெடு
தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற ஜெயலலிதா, அமைச்சர்களுக்கு 6 மாதம் கெடு கொடுத்தார். இதனால் பெரிதாக அமைச்சரவை மாற்றம் நிகழவில்லை.

3 முறை பதவியேற்பு
அதே நேரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். நள்ளிரவே முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். பிப்ரவரி 5ஆம் தேதியன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 16ஆம் தேதியன்று முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி.

பிளவும் இணைப்பும்
அதிமுக இரண்டாக பிளவு பட்டதால் கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டது. 6 மாத கால மல்லுக்கட்டுக்குப் பின்னர் தற்போது அணிகள் மீண்டும் இணைந்தன. அமாவாசை நாளான இன்று அந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது.

புதிய அமைச்சரவை
அணிகள் இணைக்கப்பட்ட உடன் இன்றே அமைச்சரவை பதவியேற்றது. துணை முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அமாவாசை நாளான இன்று அதிமுகவில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றமும், அமைச்சரவை பதவியேற்பும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications