பதவியை காப்பாற்றிக் கொள்ள கோவில் கோவிலாக செல்லும் அமைச்சர்
சென்னை: விரைவில் அமைச்சரவை மாற்றம் உண்டு என்ற தகவலை அடுத்து பயந்து போன அமைச்சர் ஒருவர்
கோவில் கோவிலாக சென்று வணங்கி வருகின்றாராம்.
சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால்
பலி என்ற நிலையில் நின்று போனது. இந்த
நிலையில், மீண்டும் அமைச்சரவை மாற்றம் உள்ளது என்ற தகவல் பரவி வருகின்றது. இதில் மற்ற
அமைச்சர்களை விட அதிக அதிகாரம் கொண்ட
நால்வரணி தான் அதிகம் கலங்கிப் போனதாம். மேலும், இளம் அமைச்சர்கள் சிலரும் அந்த லிஸ்ட்டில்
உள்ளார்களாம்.
தனது பதவி பறிபோகாமல் இருக்க ஒரு அமைச்சரின் சார்பில் ரகசிய பூஜைகள்
நடைபெறுகின்றதாம். சிவகங்கை அருகே கொல்லங்குடி என்ற
கிராமத்தில் சக்தி வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. ஒரு அமைச்சர் சார்பில்
இந்தக் கோவிலில் யாகம், பூஜைகள் என்று அல்லோலப்படுகின்றதாம்.
மேலும், தினந்தோறும் விலை உயர்ந்த இரண்டு, மூன்று கார்களில் கோவிலுக்கு அதிகாலையிலேயே
வந்து விடுகின்றார்களாம் அவரது உறவுகள்.
இதைக் காணும் பொது ஜனங்கள், சாமியை இப்படி தான் பயபக்தியோடு கும்பிடணும் என்று பேசிக்
கொள்கின்றார்களாம். ஆனால் பதவியை காப்பாற்றிக் கொள்ள தான் குடும்பமே கோவில் கோவிலாக
ஏறி இறங்கி வருகின்றது என்று சொந்த கட்சியிலேயே வாழ்த்த ஆரம்பித்துள்ளனர்.
பூஜை, யாகம் குறித்து பூசாரியிலிருந்து, கோவில் ஊழியர்கள் வரை யாருமே வாயைத் திறக்க
கூடாது என பலமான கவனிப்பு நடத்தப்பட்டுள்ளதாம்.
ஆனால் அதையும் மீறி பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது.
அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா.....












Click it and Unblock the Notifications