ஸ்ரீரங்கம் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டி எம்.எல்.ஏவின் சிறப்பு பூஜை!

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ். காமராஜ் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தினார்.

ADMK MLA performs puja for the victory of party candidate in Srirangam

எஸ்.காமராஜ், இதுவரை 41 மாத சம்பளத்தொகையினை ஜெயலலிதா பெயரில் ஏழை எளிய மக்கள், விவசாயத்தை இழந்த விவசாயிகள், திருநங்கைகள், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டோர்கள், பம்பை வசிப்பவர்கள், நரிக்குறவர்கள், ஏழை மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு கொடுத்துள்ளார்.

ADMK MLA performs puja for the victory of party candidate in Srirangam

மேலும், இந்து கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தி தமிழகத்தில் மீண்டும் மக்கள் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடு நட்த்தி வருகிறார்.

ADMK MLA performs puja for the victory of party candidate in Srirangam

தற்போது தமிழக முதல்வராக மீண்டும் ஜெ பொறுப்பேற்று அரியணையில் அமர வேண்டும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று வேண்டி கரூர் மாவட்டம் புலியூர் காளியம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் என பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+