டி.டி.வி.தினகரன் அடக்கமானவர்.. சொல்கிறார் அதிமுக எம்.எல்.ஏ. சரோஜா
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அடக்கமானவர் என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா இன்று அறிவித்தார். மேலும் டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கினார் சசிகலா.

இந்நிலையில் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக பெண் எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டம் குறித்து நன்கு அறிந்தவர் என்றும், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் குறித்து கருத்துத் தெரிவித்த ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா, துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என தெரிவித்தார்.
தினகரன் கட்சிக்கு புதிதானவர் அல்ல என்றும் அவருக்கு திடீரென பொறுப்பு கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பே அதிமுக மாநில பேரவை செயலாளராகவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தினகரன் இருந்துள்ளார் எனவும் சரோஜா கூறினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டதால் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications