கேபிள் கட்.. செய்திதாளுக்கு தடை.. 6வது நாளாக சிறையில் எம்எல்ஏக்கள்.. கூவத்தூர் மக்கள் படும் பாடு
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டு இன்று 6 நாட்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்
சென்னை: அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்று தொடர்ந்து கண்டனம் எழுந்து வரும் நிலையிலும், எந்தக் கவலையும் இல்லாமல் 6வது நாளாக இன்றும் அவர்கள் சொகுசு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க அழைக்க ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில், எம்எல்ஏக்களும் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழலை சசிகலா கும்மல் கட்டாயப்படுத்தி உருவாக்கி வருகிறது.
இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கே பம்மி பம்பி செல்ல வேண்டி இருப்பதாக கூவத்தூர் வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

6வது நாள் சிறை
நல்ல சோறு வழங்குகிறார்கள். சுதந்திரமாக இருக்கிறோம். இப்படி எல்லாம் கூறிக் கொண்டாலும் 129 எம்எல்ஏக்களும் பயந்து நடுங்கி செத்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்களின் சிறைவாசம் இன்னும் எத்தனை நாளைக்கு என்பது யாருக்கும் தெரியாது என்ற நிலையில், 6வது நாளான இன்றும் சிறைவாசம் தொடர்கிறது.

டிவி கேபிளும் கட்
இது ஒருபுறம் இருக்க, வெளியில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு சாதாகமான செய்திகள் சொகுசு ரிசார்ட்டில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில் மன்னார்குடி கோஷ்டி உஷாராக இருக்கிறது. இதனால் ஏற்கனவே செல்போன் பேச எம்எல்ஏக்களுக்கு தடை விதித்திருந்தது போன்றே, டிவி கேபிள்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், செய்தித்தாள்களும் ரிசார்ட்டுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டர்கள் மிரட்டல்
சொகுசு ரிசார்ட் பகுதியை சுற்றியுள்ள 500 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடும் தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊரில் எல்லையிலேயே சசிகலாவால் நியமிக்கப்பட்டுள்ள குண்டர்கள் 100 பேர் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

கொந்தளிப்பு
எந்த தவறும் செய்யாத நாங்கள் ஏன் கைதிகள் போல் இந்த ஊரில் முடக்கப்பட்டிருக்கிறோம் என்று கூவத்தூர் மக்கள் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. பயத்தின் காரணமாக அப்பகுதியில் வாழும் சிறுவர்கள் சிறுமிகள் பள்ளிக் செல்வதிலும், பெரியவர்கள் வேலைக்கு செல்வதிலும் தயக்கம் காட்டி வீட்டிற்குள்ளேயே கிடக்கின்றனர். இந்நிலையில், இன்று சசிகலா அந்தப் பக்கம் போனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications