வெற்றியைத் தந்தவர்களுக்கு குடும்பத்தோடு போய் நன்றி சொல்லும் அதிமுக எம்.பி!
நாமக்கல்: நாமக்கல்லில் தன்னை வெற்றி பெற வைத்த கட்சி நிர்வாகிகள் வீட்டிற்கு, தனது குடும்பத்தோடு சென்று நன்றி சொல்லி வருகிறார் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம்.
நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சுந்தரம் பல லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தனது வெற்றிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் முழு காரணம் என முதல்வர் புகழ் பாடினாலும், மறக்காமல் தனக்காக தொகுதியில் ஓடியாடி தேர்தல் வேலை பார்த்த அமைச்சர் தங்கமணியின் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்று நன்றி சொன்னார்.
அதே போல், அதிமுக கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் திடீர் விசிட் அடிக்கும் பி.ஆர்.சுந்தரம் கட்சி நிர்வாகிகளிடம், "அண்ணே, உங்க உழைப்பை என்னால் மறக்க முடியாது" என சென்டிமெண்டாக டச் பண்ணி பேசி நன்றி சொல்லி வருகின்றார்.
அட.. நம்ப கட்சியில் இப்படியும் ஒரு எம்.பி.யா என அதிமுகவி்ல் வியந்து போய் பேசி வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications
