முதல்வர் ஜெ. உடல்நலம் பற்றி பேசினா நாக்கை வெட்டுவேன்... அ.தி.மு.க. எம்.பி.யின் சர்ச்சை பேச்சு
ராசிபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பேசுபவர்களின் நாக்கை வெட்டுவேன் என்று நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. எம்.பி சுந்தரம் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
ராசிபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சுந்தரம் பேசியதாவது:

எத்தனை பேர் சி.எம். வேட்பாளர்கள்
தமிழகத்தில் எத்தனை பேர் முதல்வர் போட்டிக்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை. பா.ம.க., கோவையில் மாநாடு நடத்தி, அன்புமணிதான் முதல்வர் என்கிறது.

கோவையில் களை கட்டிய மதுவிற்பனை
டாஸ்மாக்' கடையை மூடுவோம் என்கின்றனர். ஆனால், கோவையில் மாநாடு நடந்த தினத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

நாக்கை வெட்டுவேன்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன். இனிமேல் யாராவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்.
இவ்வாறு சுந்தரம் எம்.பி. பேசினார்.

அமைச்சர் எதிர்ப்பு
இக்கூட்டத்தில் பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, எதிர்க்கட்சிகள் தான் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். அவர்களை போல் நாமும் பேசக் கூடாது. சுந்தரம் எம்.பி., பேசியதில் எனக்கு வருத்தம் உள்ளது. அரசியல் நாகரீகம் அறிந்து நாம் பேச வேண்டும் என்று கண்டித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications