'அம்மா' படத்தை மடியில் வைத்து ஜோக்கடித்து சிரித்த செயலாளர்... சீக்கிரமே "செட்டில்மென்ட்"?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்காக நடத்தப்பட்ட ருத்ர யாகத்தில் அதிமுக நகரச் செயலாளர் ஒருவர் நகைச்சுவை சொல்லி சிரித்த சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவரும் அ.தி.மு.க நகரச் செயலாள ருமான அருணாச்சலம் வீடு அருகே புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கே சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டி ருத்ரயாகம் நடத்தப்பட்டது.

அப்பொழுது கட்சியினர்கள் அனைவருக்கும் ஜெயலலிதாவின் படங்கள் வழங்கப்பட்டு தங்களது மடியில் வைத்து வேண்டி வழிபட்டனர். கட்சியினர்கள் எல்லோரும் ஜெயலலிதாவுக்காக மீது மிகுந்த பயபக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால், நகர செயலாளர் அருணாச்சலம் மட்டும் ஜெயலலிதாவின் படத்தை தனது மடியில் வைத்த நேரம் முதல், கடைசி வரை கிண்டல் அடித்து சிரித்து கொண்டே காணப்பட்டார். இதனை கண்ட அ.தி.மு.கவினர் எரிச்சலுடன் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் அருணாச்சலம் கிண்டல் அடித்து சிரித்த அந்த புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளதால் மற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை அ.தி.முக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க தலைமைக்கு சம்மந்தப்பட்ட அந்த புகைப்படத்தையும் புகாரையும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து அருணாச்சலம் மீது பல விதமான புகார்களை அ.தி.மு.க தரப்பில் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு வருவதால் அருணாச்சலம் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முத்துப்பேட்டை அ.தி.மு.கவினர்கள் சலசலக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications