அதிமுக அழிந்து விட்டது... திமுக அழியப்போகிறது.. "புளகாங்கிதப்படும்" பொன். ராதா!
மக்களை கையேந்த வைத்த கழக அரசுக்களால் இந்த தமிழகம் சீரழிந்து விட்டது. கழகங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: தமிழக மக்களை இலவசங்களை கேட்கும் நிலைக்கு தள்ளி பிச்சை எடுக்கவைக்கும் நிலைக்கு தள்ளி நாட்டு மக்களை ஓட்டுக்கு பணம், இலவசம் என்று கேட்கும் நிலைக்கு தள்ளிய கழக அரசுக்களால் இந்த தமிழகம் சீரழிந்து விட்டது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுக அழிந்துவிட்டது. அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அவர்கள் செய்த பாவத்தால் இப்போது பிரிந்துகிடக்கிறார்கள். திமுக அழியப்போகிறது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நுற்றாண்டுவிழா மத்திய பாரதிய ஜனதா கட்சியின் 3 ஆண்டு கால சாதனை, மற்றும் தேர்தல் பணி துவக்கவிழா ஆகிய முப்பெருவிழா பொதுக் கூட்டம் ரயில்நிலையம் அருகே நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் குமரேச சீனிவாசன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொட்டும் மழையில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் பேசியதாவது:

பாஜகவின் சாதனை
இந்தியாவில் இலவசமே இனி இல்லை ஆனால் ஏழை தாய்மார்களின் வேதனையை போக்க 5 கோடிபேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கவுள்ளது மத்திய பாஜக அரசு.

இலவச கேஸ் இணைப்பு
எப்படி இலவசம் இல்லையென்று சொல்லிவிட்டு இலவசம் கொடுப்பிர்கள் என்று நீங்கள் கேட்கலாம் நாட்டிலுள்ள பணக்காரர்களிடம் உங்களது கேஸ் இணைப்பு மானியத்தோடு உள்ளது அதனை விட்டுக் கொடுங்கள் ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை மத்திய பாஜக அரசு கேட்டுக்கொண்டதால் அவர்கள் திரும்ப வழங்கிய அந்த இணைப்புக்களை வழங்குகிறோம்.

நாடு சீரழிந்து விட்டது
வாரி வழங்கிய தமிழக மக்களை இலவசங்களை கேட்கும் நிலைக்கு தள்ளி பிச்சை எடுக்கவைக்கும் நிலைக்கு தள்ளி நாட்டு மக்களை ஓட்டுக்கு பணம்,இலவசம் என்று கேட்கும் நிலைக்கு தள்ளிய கழக அரசுக்களால் இந்த நாடு சீரழிந்து விட்டது.

பாஜக ஆட்சி
அதிமுக அழிந்து விட்டது. அதன் சரித்திரம் முடிந்து விட்டது. அவர்கள் செய்த பாவத்தால் இப்போது பிரிந்து கிடக்கிறார்கள். நாட்டில் 70சதவிகிதம் பாஜக ஆட்சி உள்ளது. இன்னும் ஆந்திரா,கர்நாடகா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி வந்துவிடும்.

50 ஆண்டு கால ஆட்சி
தமிழகத்தில் 50ஆண்டுகாலம் கழகங்கள் தவிர்த்து வேறு யாரும் ஆளக்கூடாது என்று நாட்டை சீரழித்து விட்டனர் என்று கூறிய அவர், 94வது பிறந்தநாள் காணும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை வாழ்த்துகிறேன் என்றார்.

திமுகவும் அழிகிறது
இப்போது திமுக அழிவை நோக்கி செல்கிறது.யாரும் இந்தக் கழகங்களை காப்பாற்ற முடியாது. தமிழக மக்களுக்கு அவர்கள் செய்த துரோகம் காரணமாக தமிழகம் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications