கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே அதிமுக ஆட்சியின் சாதனை... வைகோ
சென்னை: நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே மிச்சம். அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து விட்டது. ஊழல் நிறைந்துள்ளது. இதுதான் அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனையாகும். அதில் கடந்த 6 மாதமாக அரசு எந்திரமே செயல்படவில்லை. தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

மே 17, 18 தினம் என்பது தமிழர்களுக்கு கொலை நடுங்க வைத்த நாள். இலங்கை தமிழர்கள் படுகொலையில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை தான் பாரதீய ஜனதா அரசும் பின்பற்றுகிறது. இதில் பாரதீய ஜனதா அரசு மக்களை வஞ்சித்து விட்டது. ஈழத் தமிழர்கள் முதுகில் பாரதீய ஜனதா குத்துகிறது.
பெட்ரோல்-டீசல் விலையை இரண்டு வாரத்தில் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதற்கான முழு பலனையும் எண்ணெய் நிறுவனங்கள் பெறுகின்றன.
அதே சமயத்தில் விலை உயரும் போது அதன் சுமை மக்கள் மீது விழுகிறது. விலைவாசி உயர்வதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சியின் 1 ஆண்டு வெகுமதி பெட்ரோல்-டீசல் விலை உயர்வாகும் என்றார் வைகோ.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications