ஜெயலலிதா பிறந்த நாள்: கின்னஸ் சாதனைக்காக கட்டாய ரத்த தானம்?
வேலூர்/ மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கின்னஸ் சாதனையாக செய்யவிருக்கும் ரத்ததான முகாமில் கலந்து கொள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
வருகிற 24ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இதையொட்டி ரத்த தானத்தில் கின்னஸ் சாதனை செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் 10 நகரங்களில் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
ஆனால் போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் ரத்ததான முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.
மேலும் அப்படி கலந்து கொள்கிறவர்களுக்குத்தான் விடுமுறையுடன் சம்பளம் தருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் ரத்த தான முகாமில் கலந்து கொண்டால் சலுகைகளும் தரப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ), டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருகிறவர்களிடம் ரத்ததானம் கொடுக்க சம்மதித்தால்தான் லைசென்ஸ் தரப்படும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதாம்.
தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் பேருந்துகள் வைத்திருப்பவர்களும் ரத்ததானத்திற்கு ஆட்கள் அனுப்ப கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பல கல்லூரிகளுக்கும் கூட விடுப்பு கொடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு செலவுக்கு பணமும் கொடுத்து முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனராம்.
இதனால் இன்று பல ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications