துணை முதல்வர் பதவிதான் வேணும்... அடம்பிடிக்கும் அதிமுகவின் ஐந்தாவது கோஷ்டி!
அதிமுகவில் புதியதாக உருவாகி உள்ள ஐந்தாவது கோஷ்டி தங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகிறதாம்.
சென்னை: அதிமுக அணிகள் இணையும் நிலையில் தங்களுக்கு துணை முதல்வர் பதவியைத் தர வேண்டும் என்று அக்கட்சியில் புதியதாக உருவாகியுள்ள ஐந்தாவது கோஷ்டி அடம்பிடித்து வருகிறதாம்.
அதிமுகவானது ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன், திவாகரன் கோஷ்டிகள் என பிளவுபட்டு நிற்கிறது. தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டிகள் இணைய திட்டமிட்டுள்ளன.

புதிய கோஷ்டி
இந்த நிலையில் 28 எம்.எல்.ஏக்கள் இணைந்து தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கடந்த சில நாட்களாக அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

துணை முதல்வர் பதவி
28 எம்.எல்.ஏக்களும் சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியிருந்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிமுக அணிகள் இணையும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களது கோஷ்டிக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

கொந்தளிப்பில் கொங்கு கோஷ்டி
இது எடப்பாடியின் கொங்கு மண்டல கோஷ்டியை கொந்தளிக்க வைத்துள்ளதாம். ஆனால் கவுண்டர் சமூகத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது போல எங்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக துணை முதல்வர் பதவியை தந்தே ஆக வேண்டும் என கறாராக இருக்கிறதாம் ஐந்தாவது கோஷ்டி.

அரசு நீடிக்காது
அப்படி எங்களுக்கு எதுவும் செய்யாமல் போனால் அதிமுக அரசு நீடிக்காமல்தான் போகும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது இந்த ஐந்தாவது கோஷ்டி. இதனால் ஐந்தாவது கோஷ்டியின் நடவடிக்கைகளை உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications