நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. சசிகலா அதிமுக அவசர அழைப்பு!
அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னைக்கு வர வேண்டும் அதிமுகவின் சசிகலா அணி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அனைத்து மாவட்ட செயலாளர்கள் நாளைக்கு சென்னைக்கு வர வேண்டும் என அதிமுகவின் சசிகலா அணி அவசர அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட செயலளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சி தனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சசிகலா தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார்.

அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இதுவரை சசிகலா குடும்பத்துடன் ஒட்டிஉறவாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அதிமுக தற்போது டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னை வர சசிகலா தரப்பு அவசர அழைப்பு விடுத்துள்ளது. நாளை தலைமைக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
துணைப்பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் தலைமையில் முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications