உட்கட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்கள் தேர்வு எனப் புகார்- அதிமுகவில் புதிய பூதம்
மதுரை: மதுரையில் தி.மு.க பிரமுகர்களுடன் நெருக்கமாக இருக்கும் பலருக்கு அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை அவனியாபுரம் பகுதியில் உட்கட்சி தேர்தலில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தேர்தல் ஆணையராக இருந்த அமைச்சர் செந்துார் பாண்டியனிடம் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்தனர்.
மேலும் உட்கட்சி தேர்தலில் வட்ட செயலாளர் உட்பட பதவிகள் வழங்கப்பட்ட பலர் மதுரை தி.மு.க முக்கிய பிரமுகர்களுடன் மிக நெருக்கமாக வலம் வருபவர்கள் எனவும், அதுதொடர்பான போட்டோ ஆதாரங்களையும் சேகரித்து புகாராக அமைச்சர் பழனியப்பனிடமும் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்த நிர்வாகிகள் சிலர், " மதுரை அவனியாபுரம் உட்பட ஒருசில பகுதிகளில் முறையாக அழைத்து தேர்தல் நடத்தவில்லை. இதுகுறித்து அப்போதே புகார் அளித்தோம்.
உட்கட்சி தேர்தலில் பதவிகள் கிடைத்த பலர் இப்பகுதியின் முக்கிய தி.மு.க பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கம் காட்டுபவர்கள். அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வீட்டிற்கே சென்று வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பான போட்டோ, ஆதாரங்களுடன் சென்னையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் புகார் அளித்தோம்.
அவர் ஆலோசனைப்படி உட்கட்சி தேர்தல் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் பழனியப்பனிடம் புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications