சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு.. அதிமுக ஆதரவாளர்கள் காங்கிரசில் ஐக்கியம்
சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆதரவாளர்கள் காங்கிரசில் கட்சியில் இணைந்தனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் சுமதி நாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சசிகலா பொதுச்செயலராவதற்கே அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இருப்பினும் அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றி பதவியை அடைய சசிகலா தரப்பு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதன்படி சில மாவட்டச் செயலாளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இத்தீர்மானங்களுடன் சென்னைக்கும் படையெடுத்து சசிகலாவிடம் நேரில் கொடுத்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் சுமதி நாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் மணிரத்தினம் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.
இவரது கணவர் நாகராஜன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காத செய்தி கேட்டு இறந்து போனவர் என்பது குறிப்பிடதக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications