எல்லா ரூமும் ஏசி.. எகிறி அடித்த கரண்ட் பில்.. சூடான அதிமுக பிரமுகர்.. அடுத்து நடந்தது என்ன?
மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய அதிமுக பிரமுகருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: நாட்டில் எத்தனையோ குக் கிராமங்களுக்கு இன்னும் கரண்ட்வசதி கூட இல்லாமல் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணகிரியின் ஒரு இருளர் கிராமத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு கரண்ட் கொடுத்தது அதிமுக அரசு. இந்நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவரே கரண்டை திருட்டுத்தனமாக பயன்படுத்தியுள்ளது தற்போது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
விழுப்புரம் துருவை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 36. இவர் அதிமுக சார்பில் வானூர் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இவர் தன்வீட்டின் எல்லா அறையிலும் ஏசியை பொருத்தியுள்ளார். அதனால் எந்நேரமும், ஏசியிலேயே குளுகுளுவென வாழ்ந்து வந்துள்ளார்.

மின் ஊழியர்கள் புகார்
என்னதான் ஏசி உடலுக்கு ஜில்லென்றிருந்தாலும், அது தரும் கரண்ட் பில் சதீஷ்குமாரை சூடேற்றி விடுகிறது. ஓயாமல் ஏசி போட்டதால் கரண்ட் பில் எகிறியது. பில்லின் அவ்வளவு பெரிய தொகையை கட்ட மனசும் வராமல், ஏசியை போடாமலும் இருக்க முடியாமல் தவித்தார் சதீஷ்குமார். எனவே ஏசியை மின்மீட்டர் இணைப்பில் பொருத்தாமலேயே ஏசியை பயன்படுத்த தொடங்கினார்.

குறைவான பில்
அந்த மாதத்திற்கான கரண்ட் பில்லுக்கு ரீடிங் எடுக்க ஆட்கள் வந்தனர். அப்போது கணக்கெடுக்கும்போது பில் தொகை குறைவாக வந்தது. வீடு முழுதும் ஏசி போட்டும், சதீஷ்குமாருக்கு மட்டும் கரண்ட் பில் கம்மியாக வருகிறதே என சந்தேகப்பட்டு, திருச்சிற்றம்பலம் துணை மின்நிலைய மின்துறை மற்றும் விழுப்புரம் மின்துறை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

திருட்டு மின்சாரம்
இப்படி மின் ஊழியர்கள் புகார் அளித்தது சதீஷ்குமாருக்கு தெரியாது. புகாரின் அடிப்படையில் மின்சாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக சதீஷ்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது பல மாதங்களாகவே சதீஷ்குமார் இப்படி திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அபராதம் செலுத்திய அதிகாரிகள்
பின்னர் சுரேஷ்குமாருக்கு அபராத தொகையை எழுதி தந்துவிட்டு, விரைவில் அந்த தொகையை கட்ட வேண்டும் என்று எச்சரித்துவிட்டு சென்றனர்.பொறுப்பிலும் பதவியிலும் உள்ள முக்கிய பிரமுகரே இப்படி முறைகேடாக நடந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications