40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: சரத்குமார்
திருக்கடையூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகரும், நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு 60 வயதாகப் போகிறது. இதையொட்டி அவர் தனது மனைவி சகிதம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டார்.

சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாங்கள் அங்கம் வகிக்கிற அதிமுக தலைமையிலான கூட்டணி தலைவர்தான் முடிவு செய்வார்.
வரும் 16 ந்தேதி நெல்லையில் கட்சியின் 2 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா நாற்பதும் நமக்கே என்று சொன்னதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டிய நிலைகள் குறித்து இந்த மாநாட்டில் முடிவு செய்யப்படும்.
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டிய ஒன்று. அதை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்' எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நரேந்திர மோடியின் தாக்கத்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் ஜெயலலிதா சொன்னதுபோல் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும்' எனப் பதிலளித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications