அதிமுக வெற்றி முகம்: எம்ஜிஆர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை அந்த கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தொண்டர்கள் பால் அபிஷேகம் செய்த வழிபட்டனர்.
தமிழகத்தில் அதிமுக 129 இடங்களிலும், திமுக 95 இடங்களிலும் முன்னணியில் இந்த வெற்றியால் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

திமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் உதயமானதுதான் அதிமுக. கடந்த 1977ல் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எம்.ஜி.ஆர்., தொடர்ந்து 1987 வரை முதல்வராக இருந்தார். இதற்குப் பின்னர் தமிழகத்தில் அதிமுக, திமுகதான் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இந்த தேர்தலில் முதன்முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. திமுக காங்கிரஸ் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவியது. பாஜக தனி அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி தேமுதிக தனி அணியாகவும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் தனியாகவும் போட்டியிட்டது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே இருந்தன. இந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் உடைத்து தூள் துளாக்கி விட்டு அதிமுக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
இதன்மூலம் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக முதல்முறையாக இரண்டாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ளார் ஜெயலலிதா. இதனை தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக கொண்டாடி வருகின்றனர். நிறுவனர் என்ற பெருமையில் இருவருக்கு அதிமுகவினர் பால் அபிஷேகம் செய்து நன்றி செலுத்தினர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில் இது அதிமுகவினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications